காத்தாயி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

தா.பழூர், ஏப். 24: உதயநத்தம் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சிக்கு உட்பட்ட உதயநத்தம் காத்தாயி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசையில் இருந்து 8 நாட்கள் திருவிழா நடைபெறும். அதுபோல் இந்தாண்டு 8 நாள் திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று காலை தீமிதி திருவிழா நடந்தது. காலை வேலையில் தீமிதி திருவிழா நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும். இத்தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நேர்த்திக்கடனை செலுத்தினர். உதயநத்தம், தினக்குடி, கோடாலி, கண்டியன்கொள்ளை, தேவமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: