வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள்

கரூர், ஏப்.24:  கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வெங்கமேடு செல்லும் இருப்புப்பாதையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. வெங்கமேடு மற்றும் ராமகிருஷ்ணபுரம் விரிவாக்கப்பகுதியில்உள்ள டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் சாலையில் செல்லாமல் வெங்கமேடு பாலத்திற்கு கீழ்உள்ள ரயில்வே இருப்புப்பாதையை கடந்துசென்று வருகின்றனர். தற்போது கரூர் ரயில்நிலையத்தில் இருந்து கரூர்-ஈரோடு-திருச்சி. சேலம்-கரூர்- திண்டுக்கல் மார்க்கத்தில் ரயில்வே இருப்புப்பாதை மின்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

உயர் அழுத்த மின்சாரம் செல்லும் பகுதியாக இருக்கிறது. இருந்தும் ஆபத்தை உணராமல் பாலத்தின் பகுதியில் வசிப்பவர்கள் போக்குவரத்துக்கு மேம்பாலத்தை பயன்படுத்தாமல் இருப்புப்பாதையை கடந்து செல்கின்றனர்.பலமுறை எச்சரிக்கை செய்து நடவடிக்கை மேற்கொண்டும் தொடர்ந்து இதுபோல பாதசாரிகள் இருப்புப்பாதையைக் கடந்துசெல்கின்றனர். இது தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: