மேச்சேரி அருகே தொழிலாளியிடம் வழிப்பறி ; 3 பேர் கைது

மேச்சேரி, ஏப்.23: மேச்சேரி அருகே பாரப்பட்டி காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்(49).  கடந்த 2வாரத்திற்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, ேவடன்கரடு திட்டு அருகே ெசன்ற போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2பேர், ராமனை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம் மற்றும் ₹500 பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து ராமன் கொடுத்த புகாரின் பேரில், மேச்சேரி ேபாலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, நங்கவள்ளி ரோடு எம்.காளிப்பட்டியில், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 இருக்கர வாகனத்தை 2பேர் திருட முயன்றனர். அப்ேபாது பொதுமக்கள் பார்த்தால் தப்பி சென்றனர். இது குறித்து, எம்.காளிப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(20), ரஞ்சித்குமார்(24) ஆகியோர் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சிசிடிவி கேமராவை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், ராமனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பிரேம்குமார்(23), நாழிக்கல்பட்டியை சேர்ந்த அருணாச்சலம்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், எம்.காளிப்பட்டியில் இருசக்கர வாகனம் திருட முயன்ற வழக்கில், ஆண்டிக்கரையை சேர்ந்த அரவிந்த்(21), அவரது நண்பர் பிரேம்குமார் என்பவரை கைது செய்தனர். அவர்களை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர். அரவிந்துக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Related Stories: