வைக்கோல் போரில் தீ

கும்பகோணம், ஏப். 23: கும்பகோணம் அடுத்த மணஞ்சேரியை சேர்ந்த விவசாயி முத்துகிருஷ்ணன் (48). இவரது வீட்டின் பின்புறம் ரூ.80,000 மதிப்புள்ள வைக்கோல் போர் வைத்திருந்தனர்.நேற்று மாலை வைக்கோல் போரில் ஒருவர் தீ வைத்து விட்டு ஓடினார். இதை பார்த்து முத்துகிருஷ்ணன் உறவினர் கத்தினார். இதையடுத்து அங்கு சென்று முத்துகிருஷ்ணன் பார்த்தபோது வைக்கோல் போர் எரிந்து கொண்டிருந்தது. மேலும் அதன் அருகில் உள்ள கொட்டகைக்கும் தீ பரவியது. இந்த தகவல் கிடைத்ததும் கும்பகோணம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Related Stories: