கம்பத்தில் தீ தொண்டு நாள் வாரவிழா

கம்பம், ஏப்.23:  தீ தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு கம்பம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையில் தீயணைப்பு நிலைய குழுவினர், தீ விபத்தை தவிர்க்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து நோட்டீஸ் வழங்கினர். அதில், தீயை கவனமாக கையாளுதல், ஆடைகளில் தீப்பிடித்தால் படுத்து உருள வேண்டும், உடலில் தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும் என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. கம்பம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் இந்த நோட்டீசை நகரின் முக்கிய இடங்களான மெயின்ரோடு, அரசமரம், தலைமை தபால்நிலைய பகுதி,  புது பஸ்ஸ்டாண்டு, அரசு மருத்துவமனை பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

Related Stories: