கம்மவார் சங்கம் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

தேனி, ஏப்.23:  தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.  பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியானது. இத்தேர்வில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 194 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர் ஹரிவிக்னேஷ் 600க்கு 578 மதிப்பெண்களையும், தேவசேனா 600க்கு 566 மதிப்பெண்களையும், ஹேமதர்ஷினி 600க்கு 557 மதிப்பெண்களையும் பெற்றனர். மாணவி தேவசேனா தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களையும், ஹேமதர்ஷினி கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றனர்.  இம்மாணவ, மாணவிகளுக்கு தேனி கம்மவார் சங்கம் தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, பள்ளியின் செயலாளர் ஸ்ரீதர் இணைச்செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயராமன், முதல்வர் மீனாகுமாரி ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: