ஓமலூர் அருகே குடிநீர் வசதியில்லாததால் மாட்டு சந்தையில் கால்நடைகள் அவதி

ஓமலூர், ஏப்.22: ஓமலூர் அருகே மாட்டு சந்தையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாததால் விற்பனைக்காக கொண்டு வரப்படும் கால்நடைகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.ஓமலூர் அருகே பெருமாள் கோயில் கிராமத்தில் கூடும் மாட்டுச்சந்தை பிரசித்தம். இந்த சந்தைக்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை செய்யப்படும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் என 500க்கும் மேற்பட்டோர் கால்நடைகளை வாங்கவும் விற்கவும் வருகின்றனர். கோடை காலம் தொடங்கியுள்ளதால் காலை முதல் மாலை வரை சந்தையில் கால்நடைகள் நிறுத்தப்படுகிறது. கன்றுக்குட்டி முதல் வயதான மாடுகள் வரை பல மணி நேரம் விற்பனைக்காக காத்திருப்பதால் தாகம் தாங்க முடியாமல் நாக்கை வெளியே தள்ளிக்கொண்டு மூச்சு எடுக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில், ஒரு கால்நடைக்கு ₹50 வீதம் சுங்கம் வசூலிக்கின்றனர். சுங்கம் வசூல் செய்யும் குத்தகைதாரர்கள் ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் ஊராட்சிக்கு குத்தகை தொகை செலுத்துகிறார்கள். ஆனால், தண்ணீர் வசதி யாரும் செய்து தருவதில்லை. சந்தையில் தொட்டி இருந்தும், தண்ணீர் இல்லாததால் கால்நடைகள் தாகம் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றன. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், கால்நடைகளுக்கு தீவனப்பயிர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து தீவனம் போட்டு வளர்க்க முடியாமல் திணறி வருகின்றனர். பெருமாள் கோயில் கால்நடை சந்தைக்கு அதிகளவு கால்நடைகள் வந்தது. ஆனால், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர். கால்நடை சந்தைக்கு ஆயிரத்து 500க்கு மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. கன்றுக்குட்டி ₹4 ஆயிரத்துக்கும், பெரிய காரி மாடுகள் ₹40 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையானது. எனவே, கால்நடைகளின் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் கட்டிய தொட்டிகளில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வீரகனூர் பகுதியில்

Related Stories: