மது விற்ற 5 பேர் கைது

கோவை, ஏப்.21: கோவையில் பல்வேறு இடங்களில் மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை ஹோப் காலேஜ், சின்னியம்பாளையம், கணபதி உள்ளிட்ட இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த ரமேஷ்(33), தஞ்சாவூர் ஒரத்தநாடு மனோகரன்(35), கருப்பையா(54), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெரியய்யா(38),  இளையான்குடியை சேர்ந்த சதீஷ்(28), ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 58 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: