இடங்கணசாலையில் இரவு 8 மணி வரை நடந்த வாக்குப்பதிவு

இளம்பிள்ளை, ஏப்.19:  சேலம் அருகே இடங்கணசாலையில் இரவு 8 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பகுதியானது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டதாகும். இங்குள்ள அரசு நிடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆண், பெண்கள் என மொத்தம் 1383 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாலை 6 மணி வரையிலும் 900 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். அப்போது, மழை தூறிக்கொண்டிருந்ததால் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.

இதையடுத்து, அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பளிக்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர், வாக்குச்சாவடி மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, 1207 வாக்குகள் பதிவாகியிருந்தது. அதே வேளையில் 100க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதி கேட்டு பூத் சிலிப்புடன் வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால், வாக்குச்சாவடி அலுவலர்கள் மறுத்து விட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: