மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு

சென்னை: கூடுவாஞ்சேரியில் இருந்து (தடம் எண்: இ18) மாநகர பேருந்து நேற்று முன்தினம் இரவு பிராட்வே நோக்கி புறப்பட்டது. சென்னை அண்ணாசாலை ஆனந்த் திரையரங்கம் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, ஆட்டோ  ஒன்று பஸ் முன் வந்து நின்றது.

இதை பஸ் டிரைவர் சிற்றரசு (50) கண்டித்தார். இதனால், ஆட்டோ டிரைவருக்கும், பஸ் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் சாலையோரம் கிடந்த கல்லை எடுத்த பஸ்  கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினார். புகாரின் பேரில், ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார், ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: