விருதுநகரில் காமராஜர் பொறியியல் கல்லூரி நடத்தும் ‘காமராஜ் ஒலிம்பியார்டு 19’ போட்டி முதல் பரிசு ரூ.1.25 லட்சம்

விருதுநகர், ஏப். 8: பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு காமராஜ் பொறியியல் கல்லூரி சார்பில் காமராஜ் ஒலிம்பியார்டு 19 போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு முதல்பரிசாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படும் என கல்லூரி செயலாளர் அறிவித்துள்

ளார்.விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயலாளர் மகேஸ்குமார் அறிவிப்பு: காமராஜ் பொறியியல் கல்லூரி நடத்தும் ஒலிம்பியார்டு போட்டித் தேர்வு ஏப்.16 (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 2019ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தங்களது திறமையின் மூலம் தங்களது முதலாம் ஆண்டு கல்லூரிக்கட்டணத்தை வெல்ல ஒரு அரியவாய்ப்பு.

இப் போட்டி தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1.25 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.70 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.40 ஆயிரம் மற்றும் வெற்றி பெறும் 20 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் தேர்வு முறையில் நடத்தப்படும் போட்டி தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.இரு சுற்றுக்களை கொண்ட போட்டி தேர்வில் முதல் சுற்றில் தேர்வு பெறும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் நிச்சயப்பரிசு வழங்கப்படும். தேர்வுக்கு முன்பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர் www.kamarajengg.edu.in/olympiad என்ற இணைய தள முகவரியில் logon செய்யுங்கள் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: