விருத்தாசலம் சேமிப்பு கிடங்கிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

விருத்தாசலம், மார்ச் 26: விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு பண்டகசாலை சேமிப்பு கிடங்கில் இருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடந்தது. விருத்தாசலம், கடலூர் ரோட்டில் தமிழ்நாடு பண்டகசாலை கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இதில் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி,  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 9 சட்டமன்ற  தொகுதிகள் மற்றும் கடலூர் சிதம்பரம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது.இதற்காக நேற்று காலை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த், கடலூர் சார் ஆட்சியர் சரயூ, சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், துணை ஆட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் பண்டகசாலை குடோன்  திறக்கப்பட்டது.

தொடர்ந்து தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.அதன்படி திட்டக்குடி தொகுதிக்கு 317 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 322  வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம், விருத்தாசலம் 361 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 367 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம், நெய்வேலி 296  வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 302 உறுதி செய்யும் இயந்திரம், பண்ருட்டி 331 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 337 உறுதி செய்யும் இயந்திரம், கடலூர் 291 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 296 உறுதி செய்யும் இயந்திரம், குறிஞ்சிப்பாடி 327 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் 333 உறுதி செய்யும் இயந்திரம், புவனகிரி 373 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 380 உறுதி  செய்யும் இயந்திரம் ஆகியவை அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதுபோல் சிதம்பரம் 334 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 339 உறுதி செய்யும் இயந்திரம், காட்டுமன்னார்கோவில் 321 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு  இயந்திரம், 326 வாக்குப்பதிவு இயந்திரம் என மொத்தம் 9 தொகுதிகளில் உள்ள 2301 வாக்கு சாவடிகளுக்கும் மொத்தம் 2951 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3002 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அந்தந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த வட்ட தாசில்தார்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.அப்போது, தாசில்தார்கள் விருத்தாசலம் கவியரசு, கடலூர் செல்வகுமார், குறிஞ்சிப்பாடி உதயகுமார், காட்டுமன்னார்கோவில் தமிழ்ச்செல்வன், புவனகிரி சத்தியன், சிதம்பரம் ஹரிதாஸ், முஷ்ணம் கண்ணன், திட்டக்குடி புகழேந்தி, வேப்பூர் செந்தில்வேல் மற்றும் திமுக நகர துணை செயலாளர் ராமு, அதிமுக அருளழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் அசோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட  தலைவர் செந்தில்முருகன், தேமுதிக நகர செயலாளர் ரமேஷ் மற்றும் தேசிய மாநில கட்சிகளை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.

Related Stories: