வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

பண்ருட்டி, மார்ச் 26: பண்ருட்டியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜஸ்ரீ தலைமையில் நடந்தது. தாசில்தார் கீதா, தேர்தல் துணை வட்டாட்சியர் சிவக்குமார், செந்தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒவ்வொருவரும் வாக்குப்பதிவு மையத்தில் தாங்கள் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வீடியோ செயல் காட்சி மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. அதில் வாக்குப்பதிவு எவ்வாறு நடைபெற வேண்டும், படிவங்களை பூர்த்தி செய்தல், சீல் வைத்தல், எத்தனை சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது, வாக்குப்பதிவு முடிந்தவுடன் மண்டல அலுவலர்கள் செயல்படும் விதம், பதிவேடுகள் பராமரிப்பு, மை வைத்தல், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவுதல், இயந்திரங்கள் செயல்பாடு ஆகியவை குறித்து அறிவுரைகள் வழஙகப்பட்டன. இதில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: