அறந்தாங்கியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல்

அறந்தாங்கி, மார்ச்.22: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால், பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், இருப்பு வைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், கட்டுமாவடி, மீமிசல் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் கேரி பைகளை சிலர் இருப்பு வைத்து, விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதிகளில் தங்கு தடையின்றி பல கடைகளில் பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அறந்தாங்கி நகரில் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. புகாரின்பேரில், அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் உத்தரவி;ன்பேரில், சுகாதார அலுவலர் முத்து தலைமையில்,  சுகாதார ஆய்வாளர்; சேகர், துப்புறவு பணி மேற்பார்வையாளர்கள் ஆசைத்தம்பி, செல்வேந்திரன், ஆத்மநாதன், சுந்தர்ராஜன் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 350 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் இருந்தன. உடனே நகராட்சி அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதேப் போல வெற்றிலை கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்து, ரூ.500 அபராதம் விதித்தனர்.

Related Stories: