திருவிழாவில் காளை அவிழ்த்து விடுவதில் கோஷ்டி தகராறு 16 பேர் மீது வழக்கு

இலுப்பூர், மார்ச் 19: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பெரியகுரும்பபட்டியில் கோயில் திருவிழாவையொட்டி கோயில் காளை மற்றும் காளைகள் சிறப்பு பூஜைக்கு பின் அருகே உள்ள திடல் பகுதியில் அவழ்த்து விடப்பட்டன. இதில் சேதுராப்பட்டி பகுதியிலிருந்து வந்த ஒரு காளையை வேலாங்கால்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் பிடித்ததாக தெரிகிறது. இதில் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் ஊர் காரர்கள் சமாதானம் செய்து பிரச்

னையை சரிசெய்தனர். இந்நிலையில் சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் ஊருக்கு பைக்கில் சென்றபோது சின்னகுரும்பபட்டி பகுதியில் ஒரு இளைஞர் இது தொடர்பாக அதன் வழியே சென்ற சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞரிடம் இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளர். இது தொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அதன் வழியே சென்ற சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும், சின்னகுரும்பட்டியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் அருகில் கிடந்த கட்டை, கம்பி போன்றவைகளால்  ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பிலும் 8 மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் விராலிமலையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சின்ன குரும்பபட்டியை சேர்ந்த கோபால் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீதும்  சேதுராப்பட்டியை சேர்ந்த துரை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீதும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: