ராதா கல்யாண மகோற்சவ விழா

கும்பகோணம், மார்ச் 15:  கும்பகோணத்தில் ராதாகிருஷ்ண பக்த சமாஜம் சார்பில் ராதாகல்யாண மகோற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 8ம் தேதி காலை உஞ்சவிருத்தி, திவ்யநாமம், டோலோத்சவம் நடந்தது. 9ம் தேதி அஷ்டபதி, விஷ்ணு சகஸ்ரநாமம் நடந்தது. நேற்று காலை ராதா கல்யாண மகோத்சவம், ஆஞ்சநேய உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை ராதாகிருஷ்ண பக்த சமாஜம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: