ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் 4 ஆண்டுகளாக செயல்படாத குடிநீர் ெதாட்டி

நீடாமங்கலம்,மார்ச்14: நீடாமங்கலம் ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் செயல்படாமல் உள்ள குடி நீர் மேல் தேக்க தொட்டியை செயல்பட வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் உள்ளது.குடி நீர் மேல் தேக்க தொட்டி .இந்த நீர்தேக்க தொட்டி பழுது நீக்கம் ஊரக கட்டடங்கள்  பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டம் 2013-14 ல், ரூ.73 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்தேக்க தொட்டி கட்டி ஒரு வருடத்திலேயே செயல்பட வில்லை என கூறப்படுகிறது.கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள நீர்தேக்க தொட்டியை செயல்பட வைத்து அப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கூறுகையில், இந்த தொட்டி செயல்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. கலங்கலான தண்ணீர் வருவதால் அதை குடிநீருக்கு பயன் படுத்த முடியாத நிலை உள்ளது.

அதற்கு பதில் வேறு குடிநீர் மேல்தேக்க தொட்டியிலிருந்து திருவள்ளுவர் நகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.வேறு இடத்தில் குடி நீர் மேல் தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

Related Stories: