காயல்பட்டினத்தில் ரூ.5 லட்சத்தில் சமத்துவ மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி

ஆறுமுகநேரி, மார்ச் 8:  காயல்பட்டினத்தில் சமத்துவ மயானத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

காயல்பட்டினத்தில் 13 தெருக்களுக்கு உட்பட்ட பப்புரபளி சமத்துவ மயானம் உள்ளது.  இதற்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் ெதாகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அனிதாராதா

கிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் திமுக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகமது, அவைத்

தலைவர் முகமது முகைதீன், முன்னாள் கவுன்சிலர் சுகு, பரமன்குறிச்சி செயலாளர் இளங்கோ, தொண்டரணி துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து, பன்னீர்செல்வன், நகர துணை செயலாளர் லேண்ட் மம்மி, சமத்துவ மயான பூமி பாதுகாப்பு குழு தலைவர் தாவீது, பொருளாளர் சுயம்பு, ரத்னாபுரி ஊர் தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: