கறம்பக்குடி அருகே தைலமர காட்டில் தீ ஒரு ஏக்கர் பரப்பளவு சேதம்

கறம்பக்குடி,மார்ச்8: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வெட்டென் விடுதி அருகே தெற்கு பொன்னன் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. விவசாயி. இவரது உறவி னர்களுக்கு சொந்தமான தைலமரக்காடு உள்ளது இந்த தைலமர தோப்பில் திடீர் என்று மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து உள்ளது.

ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனியப்பன் தலைமை யில் வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 1 ஏக்கர் பரப்பள வில் எரிந்து சேதம் ஏற்பட்டது. இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். மின் கசிவின் காரணமாக தைல மரக்காட்டில் தீ பரவியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: