புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, ஜூன் 3: பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலைப் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், துரை.நாராயணன், மக்கள் ஒன்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அசோகன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர் மு.முத்தையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பிர்கள் சண்முகம், அன்பு மணவாளன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் புதுக்கோட்டை நகரச் செயலாளர் சோலையப்பன் நன்றி கூறினார்.

The post புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: