சிறுவானூர் கிராமத்தில் 102வது ஊராட்சி சபை கூட்டம் : வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர், மார்ச் 8: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சிறுவானூர் கிராமத்தில் 102வது ஊராட்சி சபை கூட்டம் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கிராம மக்கள் ஆவலுடன் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு 102 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரைப்படி ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் சிறுவானூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி, மாவட்ட நிர்வாகிகள் சிவசங்கரி, ஐ.ஏ.மகிமைதாஸ், டி.மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி, சாலை வசதி, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்காதது குறித்து பல்வேறு மனுக்களை கிராம மக்கள் வழங்கினர். அவற்றை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தீர்ப்பதாக எம்எல்ஏ உறுதி அளித்தார். முன்னதாக திருப்பாச்சூர், பாண்டூர், நெமிலியகரம், குன்னவலம், எல்லப்பநாயுடுபேட்டை ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபா கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி செயலாளர்கள் சிறுவானூர் ஆர்.மனோகரன், திருப்பாச்சூர் விஜயகுமார், பாண்டூர் டாலர் துரைசிங்கம், நெமிலியகரம் ராஜேந்திரன், குன்னவலம் சுரேஷ், எல்லப்பநாயுடுபேட்டை பாபு, முன்னாள் ஊராட்சி தலைவர் கஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: