கடல் போல் காட்சியளிக்கும் தாமரைப்பாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மழைநீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பெரிய அளவிலான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை மழைக்காலத்தில் தண்ணீர் நிரம்பினால், ஒரு பகுதி சோழவரம் ஏரிக்கும், மற்றொருபுறம் கடலுக்கும் செல்லும். இந்நிலையில் தாமரைப்பாக்கம், செம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த வருடம் பெய்த மழையால் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இங்கு மழைநீர் தேங்கி நிற்பதால் தாமரைப்பாக்கம், புன்னப்பாக்கம், காதர்வேடு, பாகல்மேடு, அமணம்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் பயனடைவார்கள். தடுப்பனையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கடல் போல் காட்சியளிக்கும் தாமரைப்பாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: