திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியது

திருவள்ளூர், மே 19: சட்டசபையில் ‘பிளாஸ்டிக்களுக்கு எதிரான மக்கள் பிரசாரம்’ செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து இது குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் பற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை குறைக்க நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் கடை கடையாக சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். இதனால் பொது மக்கள் வீட்டிலிருந்தே மஞ்சப் பை அல்லது வேறு ஏதேனும் பையை கொண்டு வந்து பொருட்களை வாங்கி செல்லும் சூழ்நிலை ஏற்
பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கி வருகின்றனர். அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணி சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த 750 பக்தர்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர், செயலர் ஆர்.கண்ணன் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையிலும் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் படியும் பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

The post திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியது appeared first on Dinakaran.

Related Stories: