டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புழல்: மாதவரம் மண்டலம், 23வது வார்டு, புழல் காந்தி பிரதான சாலையில் மாநகராட்சி சார்பில் ‘‘கொசுக்கள் இல்லாத இல்லம், நோய்கள் அற்ற இல்லம்’’ இது நம் பொறுப்பு, என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ராஜா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. இந்த கொசுக்களை அழிப்பது மிகவும் எளிது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வீட்டைச் சுற்றிலும் உள்ள தேவையற்ற பொருட்களான ஆட்டுக்கல், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் கப், டயர், வாலி, குளிர்சாதனப்பெட்டி, திறந்த நிலையில் உள்ள கிணறு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, பூந்தொட்டி, வாழை மட்டை போன்ற பொருட்களை அகற்ற வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று கூறி சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். 23வது வார்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: