கூடலூர், மார்ச் 7: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வரவேற்பு மையப்பகுதியை ஒட்டி செல்கிறது மாயாறு. இந்த ஆற்றில் வளர்ப்பு யானைகளை குளிப்பாட்ட பயன்படுத்தப்படுகிறது. யானைகள் ஆற்றில் குளிக்கும் காட்சியை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த ஆற்றில் சமீபகாலமாக முதலைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி வனத்துறையினர், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்க தடை விதித்தனர்.
