மாட்டுவண்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

முஷ்ணம், பிப். 27: முஷ்ணத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டம் நடந்தது. இதனை அரசு கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து தமிழக அரசை கண்டிக்கும் வகையில் மாட்டு வண்டிகளுடன் வந்து போராட்டம் நடத்த முயன்றனர். மாட்டு வண்டிகளுடன் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் டிஎஸ்பி ஜவகர்லால் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை தொடர்ந்து கடைவீதியில் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பட்டுசாமி, ஏஐடியுசி கவுரவ தலைவர் செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர். மணல் இன்றி கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு, கட்டுமான தொழிலாளர்கள், மாட்டுவண்டி தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் உடனடியாக மணல் குவாரி திறக்க வேண்டும் என்று

வலியுறுத்தினர்.

Related Stories: