காலை 7 மணிக்கு மேல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

மணமேல்குடி,பிப்.27: காலை 7 மணிக்கு ேமல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று நிர்வாகி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் புதிய தலைவராக முருகானந்தம், துணை தலைவராக அந்தோணி, செயலாளராக ராக்கப்பன், துணை செயலாளராக லக்குமுகம்மது, பொருளாளராக சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கைகளாக கஜா புயலால் கடற்கரை புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் உள்ள ஆறுகளை தூர்வார வேண்டும். விசைப்படகு  மீனவர்கள் அதிகாலை 7 மணிக்கு மேல் கடலுக்கு செல்லவேண்டும். அதிகாலை 4 மணிக்கு கடலுக்கு செல்வதால் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமாகின்றது உட்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: