கடலூர் நகராட்சி அலுவலகம் முன் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர், பிப். 26: கடலூர் நகராட்சி முன் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரூ.183 கோடி மதிப்பிலான கொள்ளிடம் கூட்டுக்குடி நீர் திட்டம், கடலூர் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாதது, குடிநீர் வரி, வீட்டுவரி, சொத்துவரி பல மடங்கு உயர்வு, கொசுத்தொல்லை, வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு, நோய்கள் பரவும் அபாயம், குடிநீரை தனியாருக்கு தாரை வார்த்தது, குப்பை கிடங்குகள் மாற்றப்படாதது, குண்டும் குழியுமான சாலைகள், எரியாத மின் விளக்குகள், நிரந்தர ஆணையரை நியமிக்காதது உள்ளிட்ட சீர்கேடுகளை கண்டித்து கடலூர் பெருநகராட்சி முன் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு பொருளாளர் குணசேகரன், மற்றும் நிர்வாகிகள் நாராயணன், சிவராஜ், நடராஜன், சலீம், சுந்தரமூர்த்தி உள்பட  பலர் பங்கேற்றனர்.

Related Stories: