திருப்புத்தூர் அருகே ரேஷனில் பாமாயில் கடத்திய விற்பனையாளர் சிக்கினார்

திருப்புத்தூர், பிப்.22: திருப்புத்தூர் அருகே நடுவிக்கோட்டை ரேஷன் கடையில் நேற்று விற்பனையாளர் பாமாயில் கடத்தியதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்புத்தூர் அருகேயுள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் ரேஷன் கடை விற்பனையாளராகப் பணிபுரிபவர் வயிரத்தாள்(45). இவர் கடை முடிந்து பெரிய பையுடன் வெளியே செல்வதைக் கண்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அதில் ரேஷன் பொருளான ஒரு லிட்டர் பாமாயில் 50 பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டனர். உடனே கிராமத்தினர் திருப்புத்தூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சாந்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நடுவிக்கோட்டை ரேஷன் கடைக்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர், விற்பனையாளரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது கடையில் இருந்து எடுத்து வரப்பட்ட 50 பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து திருப்புத்தூர் உணவு பொருட்கள் வைப்பு குடோனில் ஒப்படைத்தார். மேலும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.

Related Stories: