அனுமதியின்றி மஞ்சுவிரட்டு ஐந்து பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், மே 21: திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரம் பகுதி ஆலங்குடி மதகடி நாச்சியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கல்லல் ரோடு பகுதியில் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் மாடுகளை பிடித்தனர். இதில் மாடுகள் முட்டியதில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இப்பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கூறி ஆலங்குடி விஏஓ அன்னபூரணி கொடுத்த புகாரின் பேரில், நாட்சியாபுரம் காவல் நிலைய எஸ்.ஐ கருப்பையா ஆலங்குடியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (44),அழகர்(45), பாண்டி(56), செந்தில்குமார் (43), பெரியய்யா(75) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

The post அனுமதியின்றி மஞ்சுவிரட்டு ஐந்து பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: