அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவக்கம்

சிவகங்கை, மே 21: சிவகங்கை அருகே அம்பலக்காரன்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை அருகே அம்பலக்காரன்பட்டி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய நான்கு துறைகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு, முதலாமாண்டில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

https://www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் 24.5.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: