பொன்னமராவதி அருகே வாக்குப்பதிவு இயந்திரம் மாதிரி செயல் விளக்கம்

பொன்னமராவதி, பிப்.15: பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  வாக்கு பதிவு இயந்திரம் மாதிரி செயல்முறை விளக்கம் செய்து  காண்பிக்கப்பட்டது. பொன்னமராவதி தேர்தல் துணை தாசில்தார் ஜெயராமன்  தலைமையில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வாக்குப்பதிவு இயந் திரம்  மாதிரி செயல்முறை

விளக்கம் நடை பெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரத்தினை எப்படி  பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களுக்கு விரிவாக  எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி  செய்யும் கருவி ஆகியவற்றையும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.  இதை போல்  சடையம்பட்டி, மறவாமதுரை, எம்.உசிலம்பட்டி, மேலத்தானியம், கீழத்தானியம் ஆகிய  வாக்குச்சாவடிகளிலும் நடை பெற்றது. இதில் காரையூர் வருவாய் அதிகாரி சாதிக்பாட்சா, கிராம் நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்,  கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: