ஆத்தூர் அருகே போலி வாரிசு சான்று மூலம் ₹50 லட்சம், 50 பவுன் மோசடி

 ஆத்தூர், பிப்.15:ஆத்தூர் அருகே ேபாலி வாரிசு சான்று மூலம், இறந்தவரின் பெயரில் கூட்டுறவு வங்கியில் இருந்த ₹50 லட்சம் ரொக்கம் மற்றும் 50 பவுன் நகையை ேமாசடி செய்ததாக வந்த புகாரை விசாரிக்க, ஆத்தூர் தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சேலம்  கலெக்டர் அலுவலகத்தில், கடந்த திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர் நாள்  கூட்டத்தில் கலெக்டர் ரோகிணியிடம், ஆத்தூர் அடுத்த மல்லியகரை நடுவீதியை சேர்ந்த மகாலட்சுமி  என்பவர் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: ஆத்தூர் அருகே வளையமாதேவி கிராமத்தில் வசித்து வந்த எனது தந்தை தங்கவேல், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம்தேதி இறந்து விட்டார். அப்போது, ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணைத் தாசில்தாராக இருந்த சேகர் என்பவர்,  எனது தாய் கதம்பரோஜா மற்றும் எனது பெயரை விட்டு விட்டு, எனது தந்தையின் 2வது மனைவியான முத்தம்மாள், அவரது மகள் ரம்யா, மகன்கள் ரமேஷ், ராமச்சந்திரன் ஆகியோருக்கு போலியாக வாரிசு சான்று வழங்கி  உள்ளார். அந்த போலி சான்றை பயன்படுத்தி, வளையமாதேவி  கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில், எனது தந்தை பெயரில் இருந்த ₹50 லட்சம் ரொக்கம் மற்றும் 50 பவுன் தங்க நகைகளை முத்தம்மாள் மற்றும் அவரது மகள், மகன்கள் முறைகேடாக எடுத்துள்ளனர். எனவே, தலைமையிடத்து துணை தாசில்தார்  வழங்கிய போலி வாரிசு சான்றிதழை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு  மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்தும்படி, ஆத்தூர் தாசில்தார் செல்வத்துக்கு கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: