கியோகிஷின் கராத்தே போட்டிகள் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை

இடைப்பாடி, பிப்.15: சங்ககிரி மற்றும் பள்ளிபாளையத்தில், மாநில அளவிலான கியோகிஷின் கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் இடைப்பாடி, செட்டிமாங்குறிச்சி, சின்னமுத்தூர், கோனேரிப்பட்டி, ஆலச்சம்பாளையம், அடுவாப்பட்டி ஆகிய அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாணவிகள் பிரிவில் லாவண்யா கௌரி, நந்தினி, சுஜிதா, மீனா, தேவி அலமேலு, மகேஷ்வரி ஆகியோர் தங்கம் வென்றனர். சீனியர் மாணவர்கள் பிரிவில் பிரபாகரன், சின்னசாமி ஆகியோரும், சிறுவர் பிரிவில் விக்னேஷ், நிஷாந்த், காவியா ஆகியோரும் முதல் பரிசை வென்றனர். மாநில அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு இடைப்பாடி சர்வதேச கியோகுஷின் அமைப்பு சார்பில், பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.  விழாவுக்கு பீல்டு வில்வித்தை சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் சண்முகம், கலைமகள் பள்ளி முதல்வர் மோகன் கிருபானந்த், கியோகிஷின் கராத்தே பயிற்சியாளர்கள் செங்கோட்டுவேல், ராஜா, சந்திரன், மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தலைவர் முருகன், முதல்வர் மோகன் கிருபானந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: