தாந்தோணிமலை பிரதான கடைவீதியில் தடுப்பு சுவரால் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், பிப். 15: தாந்தோணிமலை பிரதான கடைவீதியில் உள்ள தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட மில்கேட் பகுதியில் இருந்து தாந்தோணிமலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தாந்தோணிமலை பழைய நகராட்சி அலுவலகம் பகுதியில் இருந்து குமரன் சாலை வரை சிறிய அளவிலான தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நர்சரி பள்ளி முதல் கடைகளுக்கு வந்து செல்லும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் மட்டும் இடைவெளி ஏற்படுத்திட வேண்டும் அல்லது முற்றிலும் அதனை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: