கொத்தமல்லி விலை குறைவு

ஒட்டன்சத்திரம், பிப். 14: ஒட்டன்சத்திரத்தில் கொத்தமல்லி விலை குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வடகாடு மலைப்பகுதிகள், கள்ளிமந்தையம், இடையகோட்டை, அத்திக்கோம்பை ஆகிய பகுதியிலிருந்து கொத்தமல்லி பயிர் செய்து, விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

சென்ற மாதங்களில் தைப்பூசம், பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் என்பதால் கொத்தமல்லி ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்திருப்பதால் ஒரு கிலோ மல்லித்ழை ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனையாகி வருகிறது. இங்கு கொண்டுவரப்படும் கொத்தமல்லி சிறு வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் நேரடியாக மார்க்கெட்டிலிருந்து வாங்கிச் செல்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: