பழநியில் சட்டக்கல்லூரி அமைக்க கோரிக்கை

 

பழநி, மே 8: பழநியில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் ஒன்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வட்டமாக பழநி விளங்குகிறது.

சமீபத்தில் தமிழக அரசு 5 புதிய சட்டக்கல்லூரிகளை துவக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே பழநியில் ஒரு சட்டக்கல்லூரி துவக்கினால் இந்நகரைச் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர். இதனைக் கருத்தில்கொண்டு பழநியில் சட்டக்கல்லூரி அமைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post பழநியில் சட்டக்கல்லூரி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: