இலவச கோடைகால கலை பயிற்சி முகாம்

 

திண்டுக்கல், மே 7: திண்டுக்கல்லில் இலவச கோடைகால கலை பயிற்சி முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, திண்டுக்கல் சவகர் சிறுவர் மன்றம் சார்பில் இலவச கோடைகால கலை பயிற்சி முகாம் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வருகிற 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, சிலம்பம், கராத்தே, கிராமிய நடனம், பரதம், மல்லர் கம்பம், ஜிம்னாஸ்டிக் ஆகிய கலை பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.  காலை 10 மணி முதல் 12 மணி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முகாமில் 275 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். பயிற்சியாளர்கள் மோகன், காளீஸ்வரி, விஜயராஜ், நாகராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ரமணி செய்திருந்தார்.

 

The post இலவச கோடைகால கலை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: