மயிலாடுதுறை அருகே ஜமாத் இடத்தை ஆக்கிரமித்து கட்டிட பணி கலெக்டரிடம் புகார் மனு

மயிலாடுதுறை, பிப்.14: மயிலாடுதுறை அருகே ஜமாத் இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதை ஜமாத்தார்கள் தடுத்ததால் புகார் மனு அளித்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே  வடகரை பள்ளிவாசலுக்கு, 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த முகமதாபீவி (60) என்பவர் தனக்கு சொந்தமான இடம் 317 சதுர அடி நிலத்தை வடகரை பள்ளிவாசலுக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். அந்த இடத்தில் அரங்கக்குடியை சேர்ந்த முகம்மது காசிம்(58) என்ற  நபர் திடீரென கடந்த வாரம்\ முகமதுபீவி எழுதி கொடுத்த 317 சதுரடி இடத்தில் கட்டிடம் கட்ட துவங்கினார். உடனே வடகரை பள்ளி ஜமாத்தார்கள் அதை தடுத்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை உரிமையியல் நீதிமன்றத்தில் முகமது காசிம் வழக்கு தொடுத்திருந்தார்.  வழக்கு நிலுவையில் உள்ளது.பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என்று பள்ளிவாசல் ஜமாத்தார்கள்  தரங்கம்பாடி தாசில்தாரிடம் மனு அளித்தனர். இந்த மனுகுறித்து கடந்த 12ம் தேதி தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தின் முடிவில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இரண்டு தரப்பினரும் பிரச்னைக்குரிய இடத்தில் எந்த பணியும் செய்யக் கூடாது என்று முடிவாகியது.இந்நிலையில் நேற்று காரை திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை வைத்து பிரச்னைக்குறிய  இடத்தில் முகமது காசிம் கட்டுமானப் பணிகளை தொடர்ந்தார். இதுகுறித்து  பள்ளிவாசல் முத்தவல்லி முகமது ரபீக் ஜமாஅத் தார்களுடன் செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கட்டுமான பணியை நிறுத்தினர். இருந்தும் நேற்று மதியம் மீண்டும் கட்டுமான பணி நடைபெற்றதால் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் முக்கிய முக்கிய பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வெங்கட்ராமனிடம் இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். மேலும் மயிலாடுதுறை ஆர்டிஓ, நாகை மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

Related Stories: