கறம்பக்குடி, பிப்.12: கறம்பக்குடி பேரூராட்சியில் அனுமதியின்றி குடிநீரை உறிஞ்சிய 16 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு 6 குடிநீர் இணைப்பு கள் துண்டிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தம் 15வார்டுகள் அமைந்துள்ளன. இங்கு மொத்தம் 50,000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின் றனர். பல ஆண்டுகளாக கறம்பக்குடி கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பொது மக்களின் குடிநீர் தட்டுபாட்டை போக்கும் வகையில் காந்தி பூங்காவில் பெரிய அளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப் பட்டு அதன் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்ட போதும் பேரூ ராட்சியில் சிலர் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பை பயன்படுத்தி வருவ தாகவும், மேலும் குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சப்படுவதாக பேரூராட்சி அலுலகத்திற்கு புகார் வந்தது.இந்த புகாரையடுத்து, செயல் அலுவலர் சுலைமான் சேட் உத்தரவின் பேரில் அலுவலர்கள், பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட் சிக்கு உட்பட்ட சுலைமான்நகர் புளியன்ஜோலை , அக்ரகாரம் ஆகிய பகுதி களில் சோதனையில் ஈடுபட்ட போது முறையின்றி குடிநீரை உறிஞ்ச மின் மோட்டார் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பகுதிகளிலும் இருந்து 16மின் மோட்டார்களை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆய்வில் அனுமதியின்றி குடிநீர் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்ட 6 குடிநீர் இணைப்புகளையும் துண்டித்தனர். மேலும் இது குறித்து பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் 15 வார்டுகளிலும் சோதனை நடத்தப்படும்.முறைகேடாக வீடுகளில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்யப்படும். அனுமதி யின்றி பயன்படுத்தப்படும் குடிநீர் இணைப்புகளையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.