புதுக்கோட்டை, டிச. 17: புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு வெளிநாட்டு பார்சல்கள் அனுப்ப சிறப்பு மேளா நடைபெறுகிறது என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு 2026 மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு வெளிநாட்டு பார்சல்கள் அனுப்புவதற்காக சிறப்பு மேளா கடந்த 15ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 15ம் தேதி சிறப்பு மேளாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட 56 அஞ்சலகத்திலும், இந்த சேவையை பயன்படுத்தி மக்கள் வெளிநாடு பார்சல்களை மலிவான விலையில் அனுப்பி பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு அருகில் இருக்கும் அஞ்சலகம் அல்லது 9865546641 என்ற எண்ணை அணுகலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு வெளிநாட்டு பார்சல்கள் அனுப்ப சிறப்பு மேளா
- புதிய ஆண்டு
- பொங்கல்
- புதுக்கோட்டை
- அஞ்சல்
- கண்காணிப்பாளரை
- முருகேசன்
- கிறிஸ்துமஸ்
- ஆங்கில புத்தாண்டு 2026
- பொங்கல்…
