ராசிபுரம் நகராட்சியில் ஒரு மாதமாக பூட்டி கிடக்கும் கழிப்பிடம்

ராசிபுரம், பிப்.6:  ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இதில் 23 மற்றும் 24வது வார்டில் கூலித்தொழிலாளர்களே அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில், பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து மாதாகோயில் தெருவில், நகராட்சி சார்பில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அப்பகுதி பொதுமக்களே பணம் வசூலித்து கழிப்பிடத்தை பராமரித்து வந்தனர். இதனிடையே, போதிய பராமரிப்பு இல்லாததால் அவ்வப்ேபாது கழிப்பறை பூட்டப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக நிரந்தரமாக கழிப்பிடத்தை பூட்டி வைத்துள்ளனர். இதனால் பெண்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த கழிப்பிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்குந்தர் கல்லூரி மாணவர்கள் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்புதிருச்செங்கோடு, பிப்.6: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இந்திய மாணவர்கள் பாராளுமன்ற மாநாடு 3 நாட்கள் நடந்தது. அரசியல் மற்றும் ஜனநாயக செயல் முறைகளில் இளைஞர்களின் உணர்திறன், விழிப்புணர்வு, ஈடுபாடு, அக்கறை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றை விரிவுபடுத்துவதே மாநாட்டின் நோக்கம் ஆகும். இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என 10 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருசெங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரசாந்த், நவீன்குமார் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டனர். மாணவர்கள் பாராளுமன்றத்தில் பஙகேற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் பேராசிரியர் பாலதண்டபாணி, முதல்வர் வெங்கடேஷ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: