ஈ செத்தை புழு புண் நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி? மருத்துவ குழுவினர் ஆலோசனை

அரவக்குறிச்சி, பிப். 6:மழையை தொடர்ந்து பனிக்காலங்களில் கால்நடைகளை தாக்கும் ஈ செத்தை என்ற புழு புண் நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் மருத்துவ முறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை விவசாயிகளுக்கு கால் நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  பனிக்காலங்களில் மழையை தொடர்ந்து கால்நடைகளை தாக்கும் ஈ செத்தை என்ற புழு புண் நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் மருத்துவ முறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை விவசாயிகளுக்கு கால் நடை பராமரிப்புத் துறையினர் கூறியுள்ளதாவது, மழையை தொடர்ந்து பிப்ரவரி வரை பனி அதிகமான காலங்களில் கால்நடைகளுக்கு பல்வேறு காரணங்களால் சிறு காயம் ஏதும் ஏற்பட்டு அவை கவனிக்கப்படாமல் போகும் போது ஈ மொய்த்து கால் நடைகளின் சதைப்பகுதியை ஈக்கள் ரணமாக்கி அவை அங்கு ஏராளமாக முட்டையிட்டுச் செல்கின்றன. அம்முட்டைகள் பொரித்து புழுக்களாக மாறி சதைப்பகுதியை துளையிட்டு தேன் கூடு போல ஏராளமாக பெருகி விடுகின்றன. ஈ செத்தை என்ற புழு புண் நோய் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். இந்நோய் கால்நடைகளின் எந்த பகுதியில் பரவியுள்ளது என்று கவனமாகக் கண்டறிந்து காயத்தின் மீது டிஞ்சர் அயோடின் தடவி அதன் மீது போரிக் பவுடர் அல்லது

சல்போனா பவுடர் வைக்கலாம். வேப்ப என்ணையும் தடவலாம். பசு எருமைகளில் மூக்கு கழுத்து கயிறு போடப்பட்டுள்ள இடங்களில் கயிறை முன் பின் உருவி விட்டு மூக்கு துவாரப் பகுதியில் உப்பு நீரால் கழுவலாம்.

கன்று ஈன்ற கால் நடைகளின் பின்புறப்பகுதியில் நீர் வெளியேறுவதால் சிறு சிறு விரிவுகள் மீது ஈக்கள் அமர்ந்து புன்ணை உண்டாக்கும். இதைத் தவிர்க்க அப்பகுதியை இளம் சுடு நீரில் உப்பு மஞ்சள் கரைத்து ஒரு வாரம் தினமும் கழுவி வேப்ப என்ணையும் தடவலாம். புழு புண்கள் மீது பினாயில் பெட்ரோல் ஊற்றுவது நல்லது அல்ல. இவை புழுக்களை அழிப்பதோடு சுற்றியுள்ள நல்ல சதை மற்றும் ரத்த நாளங்களை அரித்து புண்ணை பெரிதாக்குவதுடன், புண் ஆறுவதையும் தாமதமாக்கும்.

புழுக்களை அகற்ற டர்பன்ட் ஆயில், சூடம், தும்பைச் சாறு இவைகளில் ஒன்றை மாலை நேரங்களில் 2, 3 தடவை புண் மீது விட்டு புழுக்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் உப்பு கலந்த இளம் சுடு நீரால் கழுவ வேண்டும். கெட்டுப் போன சதைப் பகுயை அகற்றி போரிக் பவுடர் வைக்கலாம். அரசு கால்நடை மருந்தகங்களில் களிம்புகள், பொடிகள் இலவசமாகக் கிடைக்கின்றது. இதனை வாங்கி பயன்படுத்தி மேற் சொன்ன முறைகளில் செயல்பட்டு, பனிக்காலங்களில் மழையை தொடர்ந்து கால்நடைகளை தாக்கும் ஈ செத்தை என்ற புழு புண் நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாத்து நஷ்டத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்று கூறினர்.

Related Stories: