கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சித்துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், டிச. 19: 14 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மணி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் ரகு, ஆழ்வார், சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன், சுப்பிரமணியன் உட்பட பலர் கோரிக்கை குறித்து பேசினர். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுககு உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதியவிகிதம் அனுமதித்து ஆணையிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: