நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

நாகை. ஜன. 24: நாகையை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் உள்ளது. இந்த மீனவ கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு சுனாமிக்கு பின் வெட்டாற்று கரையில் இருந்து தெற்கே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மீனவ கிராமங்கள் ஒட்டிய பகுதியில் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் உள்வாங்கி வருகிறது. கிராமத்தில் கடற்கரையில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 350 மீட்டர் அளவிற்கு கடல் கரை அரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையில் இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து வருகிறது.  இதனால் கடல் கரையில் இருந்த 100க்கும் மேற்பட்ட மரங்கள் கடல் அரிப்பில் வேரோடு சாய்ந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுக்கு முன் கடற்கரையில் கரையில் எண்ணை சுத்தகரிப்பு நிலையத்திற்கு குருடாயில் எடுத்து செல்லும் குழாய்

பதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழாய் மண் அரிப்பால் தற்போதுள்ள கரையில் இருந்து சுமார் 30 மீட்டர்தொலைவில் கடலில் உள்ளது. அந்த அளவிற்கு கரை அரிப்பு ஏற்பட்டு தொடர்ந்து பாதித்து வருகிறது. தற்போது கடற்கரையில் உள்ள தென்னை மரங்கள் உள்ள பகுதியில் கரை கடல் அலைகளால் அரிக்கப்பட்டுவதால் மேலும் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாயும் அபாயத்தில் உள்ளது. உடன் கடல் அரிபை தவிர்க்கும் வகையில் கடல் கரையில் கருங்கல் கொட்டியும், தடுப்பு சுவர் அமைத்தும் கடல் அரிப்பை தடுத்திட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: