நாலாட்டின்புதூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

கோவில்பட்டி, ஜன.11:கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.  கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் வரவேற்றார். ஆர்.டி.ஓ.விஜயா முன்னிலை வகித்தார்.  அமைச்சர் கடம்பூர்ராஜூ 225 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் 21 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவி, ஊன்றுகோல்களை அமைச்சர் வழங்கினார். இதையடுத்து கோவில்பட்டி அருகே கிருஷ்ணாநகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

தாசில்தார் பரமசிவம், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, நகராட்சி கமிஷனர் அச்சையா, அனைவருக்கும் கல்வி இயக்க கயத்தாறு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பேச்சியம்மாள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி, சிவகாசி முன்னாள் எம்எல்ஏ பாலகங்காதரன், நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், அன்புராஜ், ரமேஷ், துறையூர் கணேஷ்பாண்டியன், திவான்பாட்ஷா, அருணாசலசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: