பெண் கல்வி அவசியம் விழிப்புணர்வு போட்டி

சிவகங்கை, ஜன.10: சிவகங்கை புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. வட்டார அளவிலான ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இதில் ஓவியம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. சிவகங்கை வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ) கந்தவேல் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் வங்கிகளுக்கு சென்று காசோலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை விளக்கும் விதமாக பரிசுத் தொகைகள் காசோலைகளாக வழங்கப்பட்டன. இதில் அனைத்துப் போட்டிகளிலும் முதல் இடம் பெற்ற மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கரோலின்நிஷி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

Related Stories: