மகளிர் விடியல் பயணம் டவுன் பஸ் எம்எல்ஏ, மேயர் துவக்கி வைத்தனர்

காரைக்குடி, டிச.16: காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்ட டவுன் பஸ் மற்றும் காரைக்குடியில் இருந்து பழநி என இரண்டு புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் விழா நடந்தது. துணைமேயர் நா.குணசேகரன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ மாங்குடி, மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான நல்லாட்சியில் பேருந்து வசதி இல்லாத கிராமப்புறங்களே இல்லை என கூறும் அளவில் உள்ளது. காரைக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு வருகிறது. இதில் பிரதான கோரிக்கையான பஸ், சாலை வசதி போன்றவை உடனுடக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் செயல்படுத்தி உள்ளோம். தவிர புதிய வழித்தடங்களில் பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 20க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வரின் சிறப்பான திட்டமான மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் காரைக்குடி முதல் தேவகோட்டை வரை டவுன் பஸ் மற்றும் காரைக்குடி முதல் பழநி வரை பஸ் இயக்கப்பட உள்ளது என்றார்.

மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியில் பெண்கள் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தினமும் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். முதல்வரின் ஒவ்வொரு அறிவிப்புகளும் கிராமப்புற மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமங்களும் நகரங்களுக்கு இணையாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். முதல்வர் பொறுப்பேற்றதில் இருந்து ஏழை, எளிய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து ஒவ்வொரு திட்டங்களையும் அறிவித்து வருகிறார் என்றார்.

Related Stories: