வாரச்சந்தையில் விற்பனை செய்த கெட்டுப்போன மீன், இறால் பறிமுதல்

சிவகங்கை,டிச.22: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 12 கிலோ சாயம் போடப்பட்ட பச்சை பட்டாணி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து கெட்டுப்போன இறால் மற்றும் மீன் 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பட்டாணி விற்பனை செய்த இரண்டு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

சாயம் போடப்பட்ட பட்டாணியை சாப்பிடுவதால் வரும் உடல் உபாதைகள் மற்றும் அதனால் ஏற்படும் அபாயம் கெட்டுப்போன மீன் மற்றும் இறால்களை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன், மீன் வளத்துறை ஆய்வாளர் கோமதி, மேற்பார்வையாளர் கணேசன், பேரூராட்சி மேற்பார்வையாளர் தென்னவன் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

 

Related Stories: