திருப்புத்தூர், டிச.22: திருப்புத்தூர் அருகே சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் தஞ்சாவூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் முதியவர் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் செல்வராஜ்(70).
இவர், திருப்புத்தூர் அருகே வஞ்சினிபட்டி கிராமத்திற்கு சென்று விட்டு நேற்று மாலை டூவீலரில் அறந்தாங்கி சென்றுள்ளார். அப்போது திருப்புத்தூர் அருகே சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது மதுரையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்து மோதியதில் செல்வராஜ் பலியானார். இதுகுறித்து திருப்புத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
